Friday, June 14, 2013

எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

குறிப்பு: நாம பேச்சு வழக்குல எப்படி தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவோமோ அதே நடைல இந்த போஸ்டை எழுதி இருக்கேன். எப்படி இருக்குனு உங்க கமெண்ட்ஸ் போடுங்க.

வணக்கம் நண்பர்களே!

உங்களுக்கு இங்கிலீஷ் எழுத, படிக்க தெரியும், ஆனா சரளமா பேச சிரமமா இருக்கா? 'இங்கிலீஷ் பேச தெரியலை'னு வேலை வாய்ப்புகள் உங்க கை நழுவி போயிருக்கா? 'அட, பக்கத்து வீட்டு ஸ்கூல் பசங்க கூட நல்லா இங்கிலீஷ் பேசறாங்க, என்னால முடியலை'னு வருத்தப்படறீங்களா?

இங்கிலீஷ்ல பேசறது அவ்ளோ கஷ்டமா என்ன? கண்டிப்பா இல்லை. நம்ம தாய்மொழி எப்படி பேச, எழுத, படிக்க கத்துகிட்டோமோ அதே மாதிரி தான் வேற எந்த மொழியையும் நாம கத்துக்கணும். தாய்மொழியை எப்படி பேச கத்துக்கிட்டோம்? சரியோ தப்போ, பேசினோம், பேசினோம், பேசி பேசி தான் கத்துக்கிட்டோம். அதே மாதிரிதாங்க நாம இங்கிலீஷ் பேச கத்துக்கணும். எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணிற மாட்டோமா என்ன?

முதல்ல கவனிக்க வேண்டியது உச்சரிப்பு; இங்கிலீஷ்-ல pronunciation. உச்சரிப்பு சரியா வந்தாலே உங்களுக்கு இங்கிலீஷ்-ல பேசற தன்னம்பிக்கை வந்துரும். இங்கிலீஷ் உச்சரிப்பு நல்லா வர்றதுக்கு கீழே சில டிப்ஸ்:

  1. தினம் அரை மணி நேரம் இங்கிலீஷ் பேப்பர்ல உங்களுக்கு பிடிச்ச செய்தியை வாய்விட்டு படிங்க.
  2. உங்க நண்பர்கள் கிட்ட, குடும்ப உறுப்பினர்கள் கிட்ட இங்கிலீஷ்-ல பேசுங்க. சரியோ, தப்போ எந்த கூச்சமும் இல்லாம தைரியமா பேசுங்க. நண்பர்கள் கிண்டல் பண்ணா 'நண்பன்டா! கிண்டல் பண்ணா பண்ணிட்டு போறான்' அப்படின்னு விட்டுத்தள்ளுங்க.
  3.  டிவி-ல இங்கிலீஷ் நியூஸ் கேளுங்க. நியூஸ் படிக்கறவங்க இங்கிலீஷ் சரளமா பேச தெரிஞ்சவங்க. அவங்க உச்சரிப்பை கவனமா கேளுங்க. அவங்க படிக்கற செய்தியை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.
  4. டிவி-ல சில இங்கிலீஷ் சேனல்கள்-ல டெலிகாஸ்ட் பண்ற திரைப்படங்கள்-ல கீழே இங்கிலீஷ் சப்-டைட்டில்ஸ் வரும். அதை படிச்சு படத்துல பேசறவங்க என்ன பேசறாங்கன்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.
  5. உங்களை பற்றி நீங்களே ஒரு சின்ன குறிப்பு இங்கிலீஷ்-ல எழுதி அதை வாய் விட்டு படிங்க. உங்க தன்னம்பிக்கை நல்லா இம்ப்ரூவ் ஆகும்.

4 comments:

  1. Good ideas. Expecting more tips from you, banu...

    ReplyDelete
  2. Good ideas. Expecting more tips from you, banu...

    ReplyDelete
  3. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா? kk

    ReplyDelete
  4. உங்களுக்கு இங்கிலீஷ் எழுத, படிக்க தெரியும், ஆனா சரளமா பேச சிரமமா இருக்கா?
    ஆமா!
    'அட, பக்கத்து வீட்டு ஸ்கூல் பசங்க கூட நல்லா இங்கிலீஷ் பேசறாங்க, என்னால முடியலை'னு வருத்தப்படறீங்களா
    ஆமா ஆமா!

    ReplyDelete