என்னை பற்றி...

கல்லூரி படிப்பு முடிந்ததும் முதலில் ஸ்போக்கன் இங்கிலீஷ் டீச்சராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். இந்த வேலையில் சேர்ந்ததும் தான் மற்றவர்க்கு ஒரு புது விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைப்பது, கற்றுக் கொடுப்பது - இதுவெல்லாம் எனக்கு இயல்பாகவே நன்றாக செய்ய முடியும் என்று புரிந்தது. அதுவுமில்லாமல், என் மாணவர்கள் எல்லோரும் வேலையில் இருப்பவர்கள், இல்லத்தரசிகள், மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று பலதரப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு சேர ஆங்கிலம் பேச கற்றுக்கொடுத்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. நான் மிகவும் ரசித்து செய்த வேலை அது.

உங்களில் ஆங்கிலம் தெளிவாக பேச, எழுத பயிற்சி வேண்டுபவர்களுக்கு இணையம் மூலமாக இந்த பயிற்சியை குறைந்த கட்டணத்தில் அளிக்கிறேன். என்னுடைய பயிற்சி முறையைப் பற்றி தெரிந்து கொள்ள என் ப்ளாக் போஸ்ட்டைப் பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் அல்லது கமெண்ட் செய்யவும். 

No comments:

Post a Comment